ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமா : மத்திய அரசு சிறப்பு குழு அமைப்பு

0
1488

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபாவிற்கும், மாநில சட்டசபைகளுக்கும் பல ஆண்டுகால இடைவெளிகளில் தேர்தல் நடக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனையடுத்து, லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என டில்லி வட்டார தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்குழு அளிக்கும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here