ஜி 20 மாநாட்டை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் நடத்துவோம் – பிரதமர்

0
142

ஜம்மு காஷ்மீரில் ஜி 20 மாநாடு நடத்துவது தொடர்பான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஆட்சேபங்களை நிராகரித்த பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசம் எல்லைப் பிரச்சினை, தீவிரவாதம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான தமது கருத்துகளை வெளியிட்டார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் ஜி 20 மாநாடு நடத்த உரிமை இருப்பதாகவும் அது இயல்பானது என்றும் கூறினார். ஜி 20 கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிப்பது குறித்தும் பேசிய மோடி, உலகை ஒரு குடும்பமாக காணும் இந்தியாவின் கொள்கை உலக நாடுகளுக்கு எதிர்காலத்தின் புதிய பாதையை காட்டும் வரைபடமாக இருப்பதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here