சுப்பிரமணிய சிவா

0
149

சுப்பிரமணிய சிவா 4 அக்டோபர் 1884 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பிறந்தார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர். 1913- ல் ‘ஞானபானு’ இதழை நடத்தினார். வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார். 1916 இல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதி வந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதியுள்ளார். ஆங்கிலேயக் கிறிஸ்தவக் கொடுங்கோலனின் கடுங்காவல் சிறைத் தண்டனை அவருக்கு தொழு நோயை வரவைத்தது. சிறையிலிருந்து விடுதலை அடைந்தபின்னும் பாரத அன்னையின் பணிக்காக அரும்பாடு பட்டார். தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை.1924 இல் காசியில் வசித்து வந்த இவரது தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது. தாயின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமலேயே போனது. தேச விடுதலையையே மிகப்பெரும் தவமாக மேற்கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here