அணுசக்தி சாதனங்களை தயாரிக்க பயன்படும் கதிரியக்க பொருட்கள் கடத்தப்படுவதை கண்டறிவதற்காக, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், நேபாள எல்லை பகுதிகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லை வழியே, அணுசக்தி சாதனங்களை தயாரிக்க பயன்படும் கதிரியக்க பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுஉள்ளது. இதற்காக, எல்லைகளில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளில், ஆர்.டி.இ., எனப்படும் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.