இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை : ஸ்ரீ தத்தாத்ரேய ஹோசபாலே

0
94

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உலக இந்து மாநாடு 2023 நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே, இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விஞ்ஞானானந்தா, மாதா அமிர்தானந்த மயி, பிரபல திரைப்பட இயக்குனர் அக்னிஹோத்ரி, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு, ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்று உரையாற்றிய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் ஹோசபலே, சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள உலகளவில் இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை என்றார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் மொழி, பிரிவு, சாதிகள், துணை சாதிகள் மற்றும் குழுக்கள் அடிப்படையில் பல சங்கங்கள், அமைப்புகள் மற்றும் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,
ஆனால், இந்த பன்முக அமைப்புகளில், இந்து தொலைந்து போனது. பெரிய நோக்கத்தை மறந்துவிடக் கூடாது. என ஹொசபாலே கூறினார்.
இந்து சமுதாயத்தின் குரலை திறம்பட வெளிப்படுத்தும் முயற்சியில் முரண்பாடுகள் மற்றும் வேறுபாடுகளை களைவதற்கு அமைப்புகளிடையே சிறந்த ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்து அமைப்புகள் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்றும் ஹொசபலே கூறினார்.
மதமாற்றம், இந்துக்களின் மனித உரிமைகளை நசுக்குதல், மேற்கத்திய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்துக் கல்வி மற்றும் இந்திய மொழிகள் துறைகள் இல்லாதது ஆகியவை சிறந்த அமைப்பு மூலம் எதிர்கொள்ள வேண்டிய சில சவால்கள் என ஹோசபலே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here