சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் இன்று

0
120

1. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதிபதியான சர் அசுதோசு முகர்ஜி – ஜோகமாயா தம்பதியருக்கு சூலை 6, 1901 ல் பிறந்தார்.

2. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1926 ல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று, 1927 ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

3. 1929ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாகாண சட்ட மேலவைக்கு கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்கு வங்க மாகாண சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வென்றார். 1941 – 1942 ஆண்டில் அம்மாநில நிதி அமைச்சராக பணி செய்தார்.

4. இந்து மகாசபையில் இணைந்து, இந்து மக்களுக்காக குரல் கொடுத்தார். 1944ஆம் ஆண்டில் அந்த அமைப்பின் தலைவரானார். இந்திய விடுதலைக்கு பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி.

5. ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார்.

6. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

7. சியாம் பிரசாத் முகர்ஜியின் கனவான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை தற்போது அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here