தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய கண்காட்சியை திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி !

0
55

வியாசர்பாடியில் உள்ள எஸ்.என்.டி.ஜே.ஏ விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரர்களை கெளரவிக்கும் கண்காட்சியை தமிழக ஆளுநர் ரவி அவர்கள், நேற்று தொடங்கி வைத்தார்.

வருகிற வியாழக்கிழமை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயசுயா அறிவுஜீவி அகாடமி மற்றும் தென்னிந்திய ஆய்வு மையம் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ‘தமிழ்நாட்டின் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்’ என்ற தலைப்பில் ஓவியப் கண்காட்சி ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்ற மாணவர்களின் ஓவியங்கள் சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் கண்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்து அதில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை பார்வையிட்டு மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை அவர் பாராட்டினார்.

மாணவர்களின் இந்த பணியானது கவனிக்கப்படாத இந்த நாயகர்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த ஆழ்ந்த துன்பங்கள் மற்றும் தியாகங்களை சிறப்பித்துக் காட்டுகிறது. அதே நேரத்தில் அந்த சுதந்திர போராட்ட வீரர்களால் கற்பனை செய்யப்பட்ட பாரதத்தை நனவாக்க வருங்கால சந்ததியினரை மாணவர்களின் இப்பணிகள் ஊக்குவிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

இந்த கண்காட்சியானது ஆகஸ்ட் 11 முதல் 13 வரை நடைப்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here