ஹிந்து சமுதாயத்தின் இன்றைய நிலை

1
468

சுதந்திர இந்தியாவில் ஹிந்து சமுதாயம் ஜனநாயக ரீதியாக தொடர் தாக்குதலுக்கு ஆட்பட்டு வருகிறது. ஹிந்து சமுதாயம் இயற்கையாகவே பூகோள ரீதியாக வடக்கே இமயமலையும் முப்புறமும் கடவுளாலும் சூழப்பட்டு பாதுகாப்பாக இருந்து வந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இங்கு ஊடுருவிய அந்நிய மத ஆக்கிரமிப்பு ஹிந்து சனாதன தர்மத்தை அழித்தும், இந்த சம்பிரதாயங்களை கண்டித்தும் இதனையெல்லாம் தாண்டி ஹிந்து முறையில் வழிபாடு செய்பவர்கள் மீது ஜிஸ்யா வரியை விதித்தும் தொடர்ந்து 800 வருடங்களாக தாக்குதல் நடத்தி வந்தனர்.

மற்ற நாடுகளில் எல்லாம் அந்நியர்கள் ஆக்கிரமிப்பினால் ஐம்பது வருடங்களில் தனது தனித்தன்மையை இழந்து முஸ்லிம் நாடாகவோ கிறிஸ்தவ நாடாகவோ மாறி வரும் நிலையில் தொடர்ந்து 800 வருடங்களாக ஹிந்து சமுதாயம் இந்து சனாதன தர்ம முறையில் வாழ்ந்து வருகிறது. மேலும் பிரிட்டிஷாரின் 200 வருட கால ஆட்சி முடிவிலும் கூட ஹிந்து சமுதாயம் புத்துணர்வுடன் இருந்து வருவது பெருமைக்குரிய விஷயம்.

துரதிஷ்ட வசமாக இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு புகழ் ஓங்கிய ஹிந்து சமுதாயத்தின் பெருமைகளை அறியாத நமது தலைவர்கள் மேற்கத்திய நாடுகளின் அரசியலை பார்த்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அதன் நகலாக வடித்துள்ளனர். அதன்படி இந்தியாவின் சுதந்திரம் என்பது இந்திய மக்கள் போராடிப் பெற்றதல்ல இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திர சட்டம் 1947 இயற்றப்பட்டு. அதன் மூலம் சுதந்திரம் கிடைத்ததாக நமது வரலாறு எழுதப்பட்டுள்ளது. மேலும் மதரீதியாக இந்த நாட்டின் பெரும் பகுதி மேற்கு பஞ்சாப் கிழக்கு வங்காளம் முதலியவைகள் இஸ்லாமியர்கள் நாடாக பிரித்து கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அங்குள்ள இந்துக்கள் கொலைவெறி தாக்குதலுக்கு ஆட்பட்டு அகதிகள் ஆனார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 இன் கீழ் இந்த அந்நிய மதத்தினருக்கு அவர்கள் மதத்தை பற்றி பிரச்சாரம் செய்யக்கூடிய சுதந்திரமும் சட்ட வடிவில் உரிமையாக கொடுக்கப்பட்டது‌ .அமைப்பு ரீதியான வன்முறைகளை அவர்கள் அரசின் பாதுகாப்போடு இன்றுவரை செய்து வருகிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் 26 ஏ என்ற பிரிவின் கீழ் அந்நிய மதத்தினருக்கு மதமாற்றம் பிரச்சாரம் செய்ய உரிமை அரசின் பாதுகாப்புடன் வழங்கப்பட்டு வருகிறது .அவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கும் அனுமதி கொடுக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 28ஏ இதன் கீழ் அரசின் உதவியோடு ஹிந்துக்கள் தங்கள் கல்வி நிறுவனத்தில் வேத உபநிடதங்களை கற்றுத் தருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 29-30 இதன் கீழ் அண்ணிய மதமாற்ற சக்திகள் தங்கள் வழிபாடுகளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசின் உதவியை பெற வாய்ப்பு அளித்து வருகின்றன .இந்து மதம் தவிர மற்ற மதங்கள் எல்லாம் சிறுபான்மையினராக அரசினால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் பல வகையான சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்துக்கள் தங்கள் வாரிசுகளுக்கு இந்து மதத்தின் பெருமையை கற்றுத் தருவதற்கு எந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. .இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நீதித்துறை கூட ஹிந்து சமுதாயத்திற்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு அனுமதி.

வீர சாவர்க்கரின் வரலாறு

உச்சநீதிமன்றம் கூட இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு தடை விதித்தும் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தும் பல பண்டிகைகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. உதாரணமாக தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் விதிக்கப்படுவதில்லை. முற்போக்குவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் கூட இந்து மதத்திற்கு எதிரான சடங்குகளின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கேலிசெய்து பிரச்சாரம் செய்து வரக்கூடிய நிலைமை நீடித்து வருகிறது .விலங்குகள் வன்முறை தடுப்பு என்ற சட்டத்தின் கீழ் ஹிந்துக்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது போன்ற தடைகள் விதித்தது .ஆனால் பக்ரீத் போது பசு மாடுகள் வெட்டப்படுவது குறித்து எந்த நீதிபதியும் முற்போக்கு அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை இந்த முறைகளின் மூலம் தேசத்தை பிளவுபடுத்த கூடிய முயற்சி நடந்து வருகிறது இந்தியா உடைகிறது என்ற புத்தகத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர் இதனை தெளிவாக எழுதியுள்ளார்.

ஆயிரம் வருடங்களாக அந்நியர் ஆட்சியின் கீழ் எப்படி இந்து மதத்திற்கு கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டனவோ சுதந்திர இந்தியாவிலும் முற்போக்குவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் அந்த கொடுமை தொடர்ந்து வருகிறது. இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து தடைகளும் கட்டுப்பாடுகளும் தொல்லைகளும் கொடுத்து வருகின்றன

சில அடிப்படைக் கேள்விகள் இங்கே எழுப்பப்படுகிறது.

  1. அந்நியர்களுக்கு மதமாற்ற பிரச்சாரம் உரிமையாக ஏன் கொடுக்கப்பட்டது.
  2. ஹிந்து கோவில்களை மட்டும் ஏன் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.
  3. சிறுபான்மையினருக்கு இருப்பதுபோல ஹிந்துக்கள் தங்கள் வேத உபநிடதங்களை கற்றுக்கொள்வதற்கு ஏன் சலுகைகளும் உதவியும் செய்வதில்லை.
  4. இந்துக்களுக்கு எதிரான பொதுநல வழக்குகளை ஏன் நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது.
  5. முற்போக்குவாதிகள் ஏன் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மட்டும் மேற்கொள்கிறார்கள்.

மதச்சார்பின்மை என்ற பெயரின் கீழ் இந்துமதம் மட்டும் அழிவுகளை எதிர்நோக்கி உள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது.

சந்திரசேகரன்,
ஹிந்து சங்க நாதம்.
balasekaran66@gmail.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here