இந்தியா ஓமன் இடையே தொழிற்துறைகளை மேம்படுத்த ஒப்பந்தம்.

0
133

இந்தியா ஓமன் இடையே கனிம வளத்தை மேம்படுத்தல் மற்றும் தொழில்துறைகளை பெருக்குவதற்கு மேம்படுத்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.


இந்தியா – ஓமன் நாட்டின் இருதரப்பு கனிம வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் மத்திய எரிசக்தி மற்றும் கனிமவளத்துறை சார்பில் இந்திய தூதர் முனு முகவரும், ஓமன் நாட்டின் எரிசக்தி மற்றும் கனிமவளத்துறை சார்பில் அதன் செயலாளர் சலீம் அல் அவுபி கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் மூலம் இந்தியா-ஓமன் இடையே கனிம வளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக இருதரப்பு தகவல் பரிமாற்றம் மூலம் நவீன முறையில் கனிமவளத்தை பெறுவது, அது தொடர்பான தொழில்துறைகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here