விநாயகர் சதுர்த்தி விழாவின் தடையை நீக்க கோரி இந்து தெய்வங்களிடம் முறையிட்டு இந்து முன்னணி போராட்டம்.

0
787

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை கைவிட வேண்டி இந்து முன்னனியினரும் பொதுமக்களும் கோவில் முன்பு தெய்வத்திடம் முறையிட்டு போராட்டம்.


ஆண்டுதோறும் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய நகரங்கள் முதல் சிறு கிராமங்களை வரை மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்தது இந்துக்களுக்கு எதிரானது என்றும், அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டியும் தமிழகமெங்கும் உள்ள கோவில்களில் உள்ள தெய்வத்திடம் இந்து முன்னியினரும் பொதுமக்களும் முறையிடப்போவதாக இந்து முன்னியின் மாநில செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லூரிப்பிரிவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் வாசலில் இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றினைந்நது தெய்வத்திடம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த ஆட்சியாளர்களின் மனதில் மாற்றத்தை ஏறபடுத்தி விழா சிறப்புடன் நடைபெற தெய்வமாகிய நீயே அருள் புரிய வேண்டுமென கடவுளிடம் முறையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here