ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் பெண்கள் இடம்பெறாதது பல்வேறு நாடுகளை அதிருப்தி அடையச் செய்தது.கடந்த 1996 – 2001 வரையிலான தலிபான்கள் ஆட்சியின் போது பெண்கள் கல்வி கற்க, வேலைக்கு செல்ல, பொது வாழ்க்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. ‘இது போன்ற அடக்குமுறையில் தலிபான்கள் ஈடுபடக் கூடாது’ என, பல்வேறு நாடுகளும் கருதுகின்றன.
எனவே ஆப்கன் அரசின் நடவடிக்கைகள் உலக அரங்கில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் நடவடிக்கையை பொறுத்து தான், தற்காலிக அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என, ஐ.நா., உட்பட பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், தலிபான் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. துணை அமைச்சர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலும் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை.