ஹரியானாவின் குருகிராமில் உள்ள சீக்கியர்களின் வழிபாடுத்தலமான குருத்வாரா சிங் சபாவில், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு குருத்வாரா நிர்வாகம் யோசனை தெரிவித்தது. இதற்கு உள்ளூர் சீக்கியர்கள் கடும் எதிர்பு தெரிவித்தனர். எல்லா மதத்தினரும் குருத்வாராவிற்கு வரலாம். ஆனால் குருத்வாராவில் குர்பானி மட்டுமே இருக்க முடியும், வேறு எதுவும் கூடாது. குருத்வாராவில் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்ஜியின் பழக்க வழக்கங்களுக்கு எதிரான எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தகூடாது என அவர்கள் கூறியதால் நிர்வாகம் தன் முடிவை திரும்பப் பெற்றது. இந்நிலையில், அங்கு செயல்படும் ஹிந்து உரிமைக் குழுவான சன்யுக்தா இந்து சங்கர்ஷ் சமிதியும் (SHSS) அந்த குருத்வாராவிற்கு சென்று, குரு தேக் பகதூரின் ஹிந்த் கி சதர் என்ற புத்தகங்களை விநியோகித்தனர். மேலும், தங்களுக்கான மசூதியை விடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டே முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி கேட்டிருந்த 8 மைதானங்களில் தொழுகை நடத்துவதற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குருகிராம் நிர்வாகம், தான் அளித்த அனுமதியை திரும்பப் பெற்றது.