பிபின் ராவத் இறந்த விபத்து குறித்து மூன்று குழுக்களின் கூட்டு விசாரணை(Triservice enquiry)

0
519

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்துக்கான காரணத்தை அறிய மூன்று குழுக்களின் கூட்டு  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோயம்புத்தூர் அருகே சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர் கல்லூரிக்கு செல்லும் வழியில் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உட்பட 12 பேர் உயிர் இழந்தனர். ராவத், இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக இரு ஆண்டுகள் பதவி வகித்த அவர்  நாட்டின் பாதுகாப்புக்கட்டமைப்பில்  மிக முக்கியமான மாற்றத்திற்கு வழி கோலினார். கோர்காஸில் ஒரு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் அவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் எல் எஸ் ராவத் அதிகாரியாக பதவி வகித்த  பட்டாலியன் 5/11 கூர்க்கா ரைபிள்சின் தளபதியாக உயர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here