பிரதமர் ஆவாஸ் யோஜனா – Gramin (PMAY-G) மார்ச் 2024 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்

0
507

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டத்தை மார்ச் 2021 க்குப் பிறகு தொடர்வதற்கான கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதில் மீதமுள்ள 155.75 லட்சம் வீடுகளின் கட்டுமானத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மார்ச் 31, 2021 நிலவரப்படி 2.95 கோடி வீடுகளை கட்டி முடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

அமைச்சரவை அளித்த ஒப்புதலின் விவரம் வருமாறு:

     2.95 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை அடைய  மீதமுள்ள வீடுகளை கட்டி முடிக்க, தற்போதுள்ள விதிமுறைகளின்படி மார்ச் 2021க்குப் பிறகு மார்ச் 2024 வரை PMAY-G தொடர்கிறது.

–    மீதமுள்ள 155.75 லட்சம் வீடுகளை கட்டி அதன் மூலம்  PMAY-G-ன் கீழ் கிராமப்புறங்களில் 2.95 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்குகளை அடைவதற்காக 2,17,257 கோடி (மத்திய பங்கு ரூ.1,25,106 கோடி மற்றும் மாநில பங்கு ரூ.73,475 கோடிகள்) மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதலாக ரூ.18,676 கோடி தேவைப்படுகிறது.

  – ஒவ்வொரு சிறிய மாநிலத்திற்கும் நிர்வாக நிதியின் மத்திய பங்கிலிருந்து (மொத்த நிர்வாக நிதியான 2% இல் 0.3%) ஆண்டுதோறும் கூடுதல் ₹45 லட்சம் நிர்வாக நிதியை விடுவித்தல். இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், அசாம் மற்றும் திரிபுராவைத் தவிர வடகிழக்கு  மாநிலங்கள் மற்றும் ஜே&கே தவிர அனைத்து யூனியன் பிரதேசங்களும் 1.70% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச், 2024 வரை இத்திட்டத்தினை தொடர்ந்து  PMAY-G-ன் கீழ் 2.95 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்குகளை அடைய மீதமுள்ள 155.75 லட்சம் வீடுகளைக்கட்ட வேண்டும்.  கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைத்து  “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை அடைய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்காகும்

 

நவம்பர் 29, 2021 நிலவரப்படி, மொத்த இலக்கான 2.95 கோடியில் 1.65 கோடி PMAY-G வீடுகள் கட்டப்பட்டுள்ளன. SECC 2011 தரவுத்தள அடிப்படையில்நிரந்தரக் காத்திருப்புப் பட்டியலில் உள்ள  2.02 கோடி வீடுகள் 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மொத்த இலக்கான 2.95 கோடி வீடுகளை அடைய, இந்தத் திட்டத்தைத் மார்ச் 2024 வரை. தொடர வேண்டிய தேவை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here