இதுவரை 140 கோடி கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சகம்

0
598

     இந்தியா இதுவரை 140 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

     செய்திக்குறிப்பின்படி, இந்திய அரசு  மற்றும் நேரடி மாநில கொள்முதல் வகை மூலம் இதுவரை 140 கோடிக்கும் (1,40,01,00,230) அதிகமான இலவச தடுப்பூசிகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

       19 கோடிக்கும் அதிகமான (19,08,75,946) கோவிட் தடுப்பூசிகள் இன்னும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தாமல் இருப்பில் உள்ளன.  

       COVID19 தடுப்பூசி இயக்கத்தின் உலகளாவியமயமாக்கலின் புதிய கட்டத்தில், நாட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என்று ANI செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here