இந்தியாவில் இதுவரை குறைந்தது 200 பேர் புதிய ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகளவில் ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன இரண்டிலும் தலா 54 பேர் , தெலுங்கானா (20) மற்றும் கர்நாடகா (19). செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,326 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் மற்றும் 453 இறப்புகள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் உள்ளவர்கள் 79,097, இது 574 நாட்களில் மிகக் குறைவு.
ஓமிக்ரான் பாதிப்புக்கு எதிராக இந்தியாவில் உள்ள கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் ஒரு வாரத்திற்குள் அறியப்படும், இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார். தவிர, மருத்துவ ஆக்சிஜன் திறனை அதிகரிப்பது மற்றும் அதிக அளவில் மருந்துகளை சேமித்துக்கொள்வது உள்ளிட்ட முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், எந்தவொரு பாதிப்பையும் சமாளிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார்.