பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் புதிய 3 ராபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் பாரத நாட்டிற்க்கு வர உள்ளது.
கடந்த 2016 ஆண்டு பிரான்ஸ் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தில் இருந்து ராபேல் போர் விமானம் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதனை எதிர்கட்சிகள் மற்றும் தேசவிரோத கும்பல்கள் ஒப்பந்தம் செய்ததை விமர்சித்து ஆளும் அரசு ரபேல் விமான ஒப்பந்தம் மூலம் ஊழல் செய்து விட்டது என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியது. ஆனால் ஊழல் செய்தது என்ற அடிப்படையில் எந்த முகாந்திர ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 2020 ஜூலை முதல் 2021 ஜனவரி மாதம் வரை 11 போர் விமானம் பாரதம் வந்து சேர்ந்தது. அதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் ஹிந்துக்களில் பண்பாடான பொட்டு, பூ வைத்து போசை செய்தது பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்த வாரம் மூன்று விமானங்களும், அடுத்த சில நாட்களில் ஒன்பது விமானங்களும் வந்து சேர உள்ளது என தெரியவந்துள்ளது.