பெங்களூரில் முஸ்லீம் பயங்கரவாத நாடான பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்காக இந்திய ராணுவம் தொடர்பான அழைப்புகளை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டவர்கள் கைது.
இந்திய ராணுவத்தின் புலனாய்வு குழுவும், கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு பிரிவும் இணைந்து சட்ட விரோதமான தொலைபேசி பரிமாற்றத்தை கடந்த சில மாதங்களாக கண்காணித்து வந்தன. அதில் தற்போது பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்காக ராணுவம் தொடர்பான அழைப்புகளை உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் கூறுகையில், ‘‘கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இப்ராகிம் முல்லட்டி பி முகமதுகுட்டி (36), தமிழகத்தில் உள்ள திருப்பூரை சேர்ந்த கவுதம் பி.விஸ்வநாதன் (27) ஆகிய இருவரும் பெங்களூருவில் 6 சட்டவிரோத தொலைபேசி பரிமாற்ற மையங்களை நடத்துவதாக ராணுவ புலனாய்வு பிரிவினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், 960 சிம்கார்டுகளை பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது.
இதன் மூலம் தொலைத் தொடர்பு துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதுடன், முஸ்லிம் நாடான பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு இந்திய ராணுவத்தை உளவு பார்த்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.