சென்னை : மேற்குவங்கத்தின் அரசியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து கடிதங்களை மேதகு தமிழக ஆளுனரிடம் “அக்கறை கொண்ட குடிமக்கள், தமிழ்நாடு சார்பாக வழங்கப்பட்டன “
“அக்கறை கொண்ட குடிமக்கள் – தமிழ்நாடு” ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள், சமுதாய தலைவர்கள், ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கல்வித்துறை சார்ந்தவர்கள், தொழில் துறை சார்ந்தவர்கள் போன்ற முக்கியஸ்தர்களை கொண்ட ஒரு அமைப்பு.
சமீபத்தில், மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நடந்த அரசியல் வன்முறைகள் இந்த அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு மிகப்பெரிய மன வருத்தத்தை கொடுத்தது.
பல்வேறு துறைகளை சார்ந்த 74 முக்கியஸ்தர்கள், இப்படிப்பட்ட வன்முறைகளையும், மேற்கு வங்கத்தின் மக்களுக்கு
நேர்ந்த
1.கொடுமைகளை உடனடியாக தடுத்து, அமைதியை நிலைநாட்ட
2. வன்முறையாளர்களை தண்டிக்க
3. பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளித்திட
தங்களது கையொப்பம் இட்ட கடிதங்களை மேதகு பாரத ஜனாதிபதிக்கு கொடுக்க நமது தமிழகத்தின் மேதகு ஆளுநர் அவர்களிடம் இன்று கொடுக்கப்பட்டது.
திரு. கல்யாண் ( ஒருங்கிணைப்பாளர் – அக்கறை கொண்ட குடிமக்கள் – தமிழ்நாடு), சுவாமி திரு. மித்ராநந்தா (சின்மயா மிஷன்), திரு. சரத் பாபு ( பிரபல நடிகர்) அவர்கள் இன்று மேதகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து, முக்கியஸ்தர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை சமர்ப்பித்து, மேதகு பாரத ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.