முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஓய்வுதியம் கொடுகிறது பாகிஸ்தான் – இந்தியா குற்றசாட்டு.

2
283

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதாக ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.

ஐ.நா., மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது, மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் பிரதிநிதி காலில் ஹாஷ்மி எழுப்ப முயன்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, இந்தியப் பிரதிநிதி பவன் குமார் பாதே பேசியதாவது:

ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியமும் வழங்குகிறது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். பயங்கரவாதத்தால் ஏற்படும் துன்பம், மனித உரிமை மீறலாகும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் தனது மனித உரிமை மீறல்களில் இருந்து ஆணையத்தின் கவனத்தை திசை திருப்ப, காஷ்மீர் விவகாரத்தை எழுப்புகிறது.இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.

2 COMMENTS

  1. Thank you for some other excellent post. Where else may just anyone get that kind of information in such an ideal way of writing?

    I’ve a presentation subsequent week, and I am on the look for
    such information.

  2. Asking questions are actually good thing if you are not understanding something entirely,
    except this piece of writing presents nice understanding yet.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here