உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து, உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்த சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து உ.பி காவல்துறையினர் சமர்பித்துள்ள 5,000 பக்க குற்றப் பத்திரிகையில், வன்முறையைத் தூண்டுவதற்கு ஹத்ராஸ் சம்பவத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துவது பற்றி விவாதிக்க பி.எஃப்.ஐ தலைவர்களால் செப்டம்பர் 20, 2020ல் ஒரு ரகசிய பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில், இளைஞர்களை அரசாங்கத்திற்கு எதிராக திருப்புவது, ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக மாற்றுவது. வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெறுவது போன்றவை குறித்து கூறப்பட்டுள்ளது. கப்பன் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். இதற்கான ஆதாரங்களை அவரது அலைபேசியில் இருந்து காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், 6 ஸ்மார்ட்போன்கள்,1,717 அச்சிடப்பட்ட ஆவணங்களையும் உ.பி. போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.