காஷ்மீரில் தொடங்கிய பொற்காலம்

0
181

மத்திய அரசு கொண்டுவந்த தொடர் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மக்கள் வேலைவாய்ப்பு பொருளாதாரம் சகஜ நிலைக்கு மாறி மக்கள் மறுமலர்ச்சி அடைந்து வருவது கண்கூடாக தெரிகிறது.மக்கள் மனதில் நிர்வாகத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

  1. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தொகுதி எண்ணிக்கையை அதிகபடுத்தப்பட உள்ளது.
  2. விசேஷ சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு மற்ற மாநிலங் களுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது.
  3. அரசியல் வேற்றுமைகள் முடிவுக்கு வந்தபிறகு பெண்கள், பட்டியலின மக்கள், மலைவாழ் மக்கள், மேற்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் சம உரிமை பெற்று வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
  4. பாகிஸ்தானுக்கு சென்று வரும் உபரி நீர் நிறுத்தப்பட்டு 6 000 கோடி ரூபாய் செலவில் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டு கத்துவா மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  5. ஜம்மு-காஷ்மீருக்கு இடையே இருந்த சுவர் இடிக்கப்பட்ட எங்கு வேண்டுமானாலும் வீடு நிலங்கள் வாங்குவதற்காக சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது 6 7வது சம்பள கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
  6. அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் 51.7 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் முதன்முறையாக 100 மகளிர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .20 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  7. முதன்முறையாக ஆறு மாவட்டங்களில் மகளிர் மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அதில் பட்டியலின மலைவாழ்மக்கள் தலா இரண்டு பேர்.
  8. துப்பாக்கி சூடு தடியடி பிரயோகம் எதுவுமில்லாமல் 280 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 2,178 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் அதில் 450 பேர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.
  9. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1000கோடி ரூபாய். ஒதுக்கப்பட்டுள்ளது.
    1500 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு எல்லா பஞ்சாயத்து தலைவரின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
  10. காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட இந்துக்ள் 6000 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  11. உதம்பூர் பாரமுல்லா ரயில் பாதை திட்டம் விரைவுபடுத்தப்பட்ட நிறைவேறும் நிலையில் உள்ளது.
  12. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 29 478 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
  13. பல இடங்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் 6 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர் சட்டம் ஒழுங்கு சகஜ நிலையில் இருந்ததால் தான் இது முடிந்தது.
  14. கிராமத்திற்கு திரும்புவோம் என்ற திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
  15. தேசியக் கொடியின் மீது மரியாதை ஏற்படுத்தும் விதமாக 23 111 பள்ளிகளில் மூவர்ண கலரில் பள்ளிகள் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
  16. பதினோரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரும் திட்டத்தின் கீழ் 10500கோடி
    ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
  17. 5300 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராமப்புற சாலை பாதை அமைக்கப்பட்டுள்ளது
  18. பிரதம மந்திரி சிறப்பு நிதி ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 80000கோடி ரூபாய் ஜம்மு-காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

சந்திரசேகர்,
balasekaran66@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here