செங்கல்பட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் விரைவில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

0
304

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிக்க, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை, 700 கோடி ரூபாய் செலவில், ஹெச்.எல்.எல்., பயோடெக் நிறுவனம் அமைத்துள்ளது; 2013ல் துவங்கிய கட்டுமான பணிகள், 2017ல் முடிவுக்கு வந்தன. தடுப்பூசி தயாரிக்கும் பணி துவக்கப்படவில்லை. இதற்கிடையில், நாடு முழுதும் குரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்கும்படி, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனியார் பங்களிப்புடன் குரோனா தடுப்பூசி தயாரிக்க, மத்திய அரசு டெண்டர் கோரியது; எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது ‘செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள, பாரத் பயோடெக் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் தயாராக உள்ளன. ‘பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது’ என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் தடுப்பூசி தயாரிக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here