பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய மென்பொருளை பயன்படுத்தி மின் துறையின் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் இந்தியாவில் ஒரு அரசாங்க அமைப்பை குறி வைத்துள்ளனர் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட லுமேன் டெக்னாலஜிஸின் புலனாய்வுப் பிரிவான பிளாக் லோட்டஸ் லேப்ஸ் தெரிவித்து உள்ளது.