தினசரி பாதிப்பில் நேற்று திடிரென கேரளாவில் குரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. இதனால் மத்திய சுகாதார துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவுவுக்கு தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் பக்ரீத் பண்டிகையின் ஊரடங்கு தளர்வு தான் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது.
குறிப்பாக நேற்று, 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.6 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பாதிப்பு சதவீதம் 17ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே தொற்று பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.