ஆப்கானிஸ்தானில் வங்கியில் இருந்து வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் பணமாக எடுக்க தடை விதித்து தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய பயன்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியதால், ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த ஆப்கன் பொருளாதாரம் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் ஆப்கனில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இச்சூழலை சமாளிக்க தலிபான்கள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, சென்ட்ரல் பேங்க் ஆப் ஆப்கானிஸ்தான் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அனைத்து வங்கிகளிலும் மக்கள் ஒரு வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் (ஆப்கன் மதிப்பில் 2000 ஏ.எப்.எஸ்) வங்கியில் இருந்து பணமாக எடுக்க தடை விதித்துள்ளது.