கங்கைக்கரையில் இயற்கை வேளாண்மை.

0
451

உத்தர பிரதேச அரசு, கங்கைக்கரையினை ஒட்டிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 21,142 விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் 700 இயற்கை விவசாய மண்டலங்களை உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் விவசாயச் செலவு குறைந்துள்ளது. உற்பத்தியும் வருமானமும் அதிகரித்துள்ளது. கங்கை நதி மாசடைவதும் குறைந்துள்ளது. இந்த விவசாயிகள் கரிஃப் 2020 மற்றும் ரபி 2020-21 பருவ காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலமாக பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். அந்த பொருட்கள் பேக் செய்யப்பட்டு நல்ல விலையில் விற்கப்பட்டன. இத்தயாரிப்புகள் கண்காட்சிகள், கருத்தரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன. இத்திட்டத்தில் இதுவரை ரூ. 2.76 கோடி மதிப்புள்ள இயற்கை வேளாண் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க கரிம சான்றிதழ் அமைப்பு அமைத்தல், வெர்மி உரம் தயாரிப்பு, சாண எரிவாயு உற்பத்தி, தாவரங்கள் உணவு பதப்படுத்துதலுக்கு சிறப்பு மானியங்கள், ஆறு மாவட்டங்களில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள், பேக்கேஜிங், ஏற்றுமதி ஆராய்ச்சி வசதிகள், உணவு பதப்படுத்துதல் துறையில் ஈடுபடும் சிறுதொழில் அமைப்பதற்கு வட்டியில்லா கடன்கள் வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source by – Vijayabharatham Weekly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here