ஆப்கனில் முதலீடு செய்வது குறித்து பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் முடிவு செய்ய வேண்டும் – அமைச்சர் நிதின் கட்கரி.

0
338

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு, இந்தியா முதலீடுகளை மேற்கொள்வது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளதாவது:


ஆப்கன் நட்பு நாடாக இருந்த நிலையில் அங்கு இந்தியா முதலீடுகளை மேற்கொண்டது. இதுவரை 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அணை கட்டுமானம், சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் தற்போது ஆப்கனில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தலிபான்களின் புதிய அரசுடனான உறவு குறித்து வெளியுறவுத் துறை தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஆப்கனில் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொள்வது குறித்தும் முடிவுகள் எட்டப்படும். குறிப்பாக, ஆப்கனில் உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும்தான் முடிவு செய்ய வேண்டும். என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here