இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாகோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கீதா சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றி வருகிறார். கீதா கோபிநாத் தற்போதைய துணை நிர்வாக இயக்குனர் ஜெஃப்ரி ஒகமோட்டோவிடம் இருந்து பொறுப்பை பெற்றுகொள்கிறார். கீதா கோபிநாத்துக்கு அமெரிக்கா மற்றும் இந்திய குடியுரிமை உள்ளது. ஜனவரி 21, 2022 அன்று அவர் துணை நிர்வாக இயக்குனராக பதவியேற்கிறார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான முதல் பெண் கீதா ஆவார்.
கேரளாவைச் சேர்ந்த கீதா 1992 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் Honors பட்டம் பெற்றார். அதன் பிறகு டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலை முடித்த பிறகு, கீதா வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு அவர் 1996 முதல் 2001 வரை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி செய்தார். முனைவர் பட்டம் பெற்ற பின் கீதா 2005 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். 2015 இல், ஹார்வார்டில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராக பணி புரிந்தார். 2018 இல், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராய் பணி புரிந்த கீதா கோபிநாத் மீண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணியாற்றினார். கீதா கோபிநாத் முதல் பெண் துணை நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய கொள்கைகளுக்கு தலைமை தாங்குவார்.
கூடுதலாக, அவர் ஆராய்ச்சி மற்றும் முக்கிய வெளியீடுகளையும் மேற்பார்வையிடுவார்.
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகையில், ஜெஃப்ரி மற்றும் கீதா இருவரும் அற்புதமாய் பணியாற்றகூடியவர்கள். – ஜெஃப்ரி வெளியேறுவதைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன், ஆனால் அதே நேரத்தில், கீதா துணை நிர்வாக இயக்குனராக தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச நாணய நிதியத்திற்காக கீதா கோபிநாத் ஏற்கனவே செய்த பங்களிப்பு மகத்தானது.,குறிப்பாக சரவதேச நாணய நிதியம் மற்று உலக பொருளாதாரத்தின் ஏற்ற தாழ்வுகள்,மோசமான பொருளாதார சூழ்நிலைகளில் கீதாவின் செயல்கள் மகத்தானவை என்றும் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.