சேவா தீவாளி- அமெரிக்காவில் ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கத்தின் தொண்டு

0
471

இந்து ஸ்வயம்சேவக் சங்கம்(HSS) “சேவாதீவாளி”(Sewa Diwali)இயக்கத்தின் ஒரு பகுதியாக, Sun Prairie Emergency Food Pantry மற்றும் Cards Closetக்கு பயனளிக்கும் வகையில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து உணவு/விநியோகம்/ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. சன் ப்ரேரியில் இரண்டாவது ஆண்டாக நடக்கும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சுமார் 2,000 பவுண்ட் மதிப்புள்ள பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

“மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்ற எண்ணத்துடன் கூட பல  சமூகங்கள், தனிநபர்கள் மற்றும் யோகா, ஆன்மீகம் இயக்கங்கள் இந்து/பௌத்த/சீக்கிய/ஜைன மையங்கள், கோயில்கள், குருத்வாராக்கள், மொழியியல் மற்றும் இந்திய சமூக-கலாச்சார அமைப்புகள் ஆகியவை இணைந்து இந்த “சேவா தீவாளி” இயக்கத்தினை நடத்துகின்றன.

2020 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களின் போது  இந்து அமெரிக்க சமூகம் ​​நாட்டில் உள்ள 26 மாநிலங்களில் உள்ள 225 நகரங்களைச் சுற்றியுள்ள 199 உணவுப் மையங்கள் மற்றும் உணவு வங்கிகளுக்கு 293,000 பவுண்டுகள் உணவைச் சேகரித்து நன்கொடையாக வழங்கியது.

“சேவாதீவாளி” இயக்கத்தின்  ஒரு பகுதியாக, சன் ப்ரேரியில் உள்ள இந்து ஸ்வயம்சேவக் சங்கம், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சங்கம் (AIA), AHA டெம்பிள், மேடிசன் கன்னட கூட்டா, சிலிக்கான் ஆந்திரா, சேவா இன்டர்நேஷனல், டெக்னோவிஸ், தி ஆர்ட் ஆஃப் லிவிங் மற்றும் தி ப்ரோ பூட்டிக் ஆகியவை அமைப்புகளும் அவர்களுடன் தொடர்புடைய குடும்பங்களும் ஒருங்கிணைந்து உணவு/ பொருட்கள்/உடைகளை நன்கொடையாக வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here