‘அவர் மீண்டு வருவார் என நம்புகிறோம்’: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரின் தந்தை

0
214

போபாலில் வசிக்கும் ஒய்வு பெற்ற கர்னல்  கே.பி. சிங், அவரது மகன் குரூப் கேப்டன் வருண் சிங், இந்த சம்பவம் நடப்பதற்கு  சில நாட்களுக்கு முன்பு தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறினார்.

       பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேரை பலி கொண்ட  நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். பலத்த காயமடைந்த வருண் சிங், (39)பெங்களூருவில் உள்ள கமான்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சிறிது தூரம் சாலையிலும் பின்னர் விமானம் மூலமும் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர் உயிர் பிழைப்பார் என்று அவர் குடும்பத்தினர் நம்பிக்கையில் உள்ளனர்.

     “அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் உடலில்  நிறைய காயங்கள் உள்ளன. பெங்களூரு கமான்ட் மருத்துவமனையில் வசதிகள் நன்றாக உள்ளன, அவர் குணமடைந்து மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று வருணின் தந்தை கர்னல் (ஓய்வு பெற்ற) கே பி சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். வருண் முன்பு குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் வெலிங்டனில் உள்ள மருத்துவமனையில் இருந்தார்.

       போபாலில் வசிக்கும் கர்னல் சிங், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தனது மகன் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறினார். “என்னிடமும் என் மனைவியிடமும் அவர் பேசியது ஒரு சாதாரண அழைப்புதான். வெலிங்டனில் உள்ள Defence service staff collegeக்கு CDS வருவது  அப்போது முடிவு செய்யப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்”.

     வருண் சிங்கின் மாமாவான அகிலேஷ் பி சிங், “அவர் குணமடைய குடும்பத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள்” என்றும், இந்த சம்பவம் “குடும்பத்தினருக்கு முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது” என்றும் கூறினார். உத்திரபிரதேசத்தின் ருத்ராபூர் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வருணின் சித்தப்பா, வருண் “ஒரு புத்திகூர்மையுள்ள மாணவர் மற்றும் எப்போதும் ராணுவத்திற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பினார்” என்றும் கூறினார்.

    “அவர் மிக இளம் வயதிலேயே மிக பெரிய லட்சியத்தோடு  இருந்தார். மேலும் அவர் தனது முதல் முயற்சியிலேயே தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) தேர்ச்சி பெற்றார். நாங்கள் அனைவரும் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தோம், அந்த குடும்பத்துடனான  எங்கள் உறவு பிரிக்க முடியாதது. அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்ற சென்றதால் நங்கள் பிரிய வேண்டி வந்தது. ஆனால் எங்கள் உறவின் வேர்கள் மிகவும் வலுவனவை, ”என்று அகிலேஷ் கூறினார்.

    வருண்(39) ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது சகோதரர் இந்திய கடற்படையில் பணியாற்றுகிறார் மற்றும் அவரது தந்தை கர்னல் (ஓய்வு) கேபி சிங் விமானப்படையில் பணியாற்றினார்.

    அருண் சமீபத்தில் குழு கேப்டனாக பதவி உயர்வு பெற்று பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் நியமிக்கப்பட்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    அக்டோபர் 12, 2020 அன்று வான்வழி அவசரநிலையின் போது தனது இலகுரக போர் விமானம் (எல்சிஏ) தேஜாஸைக் காப்பாற்றியதற்காக வருணுக்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று “சௌர்ய சக்ரா” வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here