தியாகம் செய்த ராணுவ வீரரின் சகோதரியின் திருமணத்தில் சகோதரனின் பொறுப்பை ஏற்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்

0
238

     உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் சைலேந்திர பிரதாப் சிங். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தெற்கு காஷ்மீரில் பணியாற்றி வந்த போது அக்டோபர் 2020 ல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். அவரின் சகோதரி ஜோதி சிங். இவரின் திருமணம் டிசம்பர் 13ம் தேதி அன்று ரேபரேலியில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சடங்குகளில் பங்கேற்றது மட்டுமின்றி, தங்கையை சகோதரனைப் போல ஆசிர்வதித்து பரிசும் அளித்தனர். அதுமட்டுமின்றி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுனாரியைப் மணமகளின் தலை மேல் பிடித்து, சகோதரியை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.இது அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here