*இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து செயல்படுகின்றன-அமெரிக்கா*
வியாழன் அன்று வெளியிடப்பட்ட பயங்கரவாதம் குறித்த அறிக்கைகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பிராந்திய ரீதியாக, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து செயல்படுவதாக கூறினார்.
ஜேஇஎம் நிறுவனர் மற்றும் ஐநாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட அசார் மற்றும் 2008 மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மீர் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருப்பதாக நம்பப்படுகிறது என்றும் அவர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பிப்ரவரியிலும், நவம்பர் மாதத்திலும், லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக பல குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டியது மற்றும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது, அறிக்கை குறிப்பிட்டது.
2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது (அமெரிக்காவின்) நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) செயல் திட்டத்தை முடிப்பதில் கூடுதல் முன்னேற்றம் அடைந்தது என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் அனைத்து செயல் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை, எனவே பாகிஸ்தானின் FATFன் “சாம்பல் பட்டியலில் உள்ளது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது