பெண்களின்  திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அரசு ஒப்புதல்

0
544

    பெண் குழந்தைகளின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இதற்கான முன்மொழிவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். இப்போது நடக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

     தற்போது நாட்டில் பெண்களின் திரு மண வயது 18 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவிலேயே பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து விவாதித்தார். ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து பெண்களைக்காப்பாற்ற, சரியான நேரத்தில் திருமணம் செய்து வைப்பது அவசியம் என்று அவர் கூறியிருந்தார்.

    குழந்தை திருமண தடை சட்டம், சிறப்பு திருமண சட்டம் மற்றும் இந்து திருமண சட்டம் ஆகியவற்றிலும் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவுள்ளது. ஊடக அறிக்கையின்படி, இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், அனைத்து மதங்கள் மற்றும் வகுப்புகளில் உள்ள பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது மாற்றப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here