கோவாவில் நடந்த சுதந்திர போராட்ட தின விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடியை பனாஜி விமான நிலையத்தில்முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார். ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கோவாவின் சுதந்திர போராட்ட வீரர்களையும், இந்திய ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட “ஆபரேஷன் விஜய்”யில் பங்கு கொண்ட மூத்த வீரர்களையும் பிரதமர் கௌரவித்தார். மேலும் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைதார்.
போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை விடுவித்த இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் விஜய்’ வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 19 அன்று கோவா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.