கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கோவிட்-19 தொடர்பான நிலைமையை வியாழக்கிழமை மறு ஆய்வு செய்ய உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 புதிய கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. மற்றும் 318 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. தற்போது 78,190 பேர் சிகிச்சையில் உள்ளனர்,, இது 575 நாட்களில் மிகக் குறைவு.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இதுவரை 213 பேர் ஓமிக்ரான் வகை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டெல்லி முதலிடத்திலும், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகியவையும் உள்ளன.
இதற்கிடையில் பிரதமர் ஏற்பாடு செய்துள்ள ஆய்வுக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.