ஒமிக்ரான் எண்ணிக்கை: ஒரே நாளில் 2630

0
524

இந்தியாவில் ஒரே நாளில் 2630 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளா 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில் 204 மற்றும் தமிழ்நாட்டில் 121 பேர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 90,928 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 200 நாட்களில் அதிகபட்சமாகும். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,51,09,286 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி 91,702 புதிய தொற்றுகள் பதிவாகிஇருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here