கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அடுத்த 48 மலை கிராமங்களில் வசித்து வரும் காணி சமுதாய மக்களுக்கான பொங்கல் விழா ஆற்றூர் என் வி கே எஸ் பள்ளியில் நடைபெற்றது. வன சக்தி சங்கமம் நான்காவது ஆண்டாக நடத்தும் இவ்விழா ஜனவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி வரை நடைபெற்றது.
சுமார் 1500 காணி சமுதாய மக்கள் குடும்பத்தோடு இதில் கலந்து கொண்டார்கள். விழாவில் விளக்கு பூஜை, சிறப்பு யாகம், பொங்கல், வயது வாரி குழு சந்திப்பு நடைபெற்றது. காணி சமுதாய மக்களுக்காக பொங்கல் விருந்து, பொங்கல் பானை, பொங்கல் போடுவதற்கான பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
4 ஆண்டு தொடர் முயற்சியால் இந்த மலைவாழ் மக்களில் மதம் மாறி சென்ற 40 சதவிகித மக்களில் 20 சதவிகித மக்கள் தாய் மதம் திரும்பியுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காணி சமுதாய மக்கள் ‘மதம் மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்’.
சேவா பாரதியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் திரு கே. ராஜேஸ்வரன்ஜி, என் வி கே எஸ் பள்ளியின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணகுமார்ஜி,காளி மலை அறக்கட்டளை உறுப்பினர் திரு.ரவிக்குமார்ஜி,ஹிந்து தர்ம வித்யாபீடம் வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ்,ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் க்ஷேத்ர சங்ககாலக் மானனீய வன்னியராஜன் ஜி
குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திரு.R ராஜாராம்ஜி, திரு.C ராஜேந்திரன்ஜி, ஆர்எஸ்எஸ்-ன் தென்தமிழ்நாடு செயலாளர் திரு. பவீதரன்ஜி மற்றும் தென்தமிழ்நாடு துணை அமைப்பாளர் திரு. பிரஷோப குமார்ஜி, தென்தமிழ்நாடு மக்கள் தொடர்பு பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன்ஜி அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மலைப்பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற மாணவிக்கு ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான உதவித்தொகை விழாவில் வழங்கப்பட்டது.