உடல் செயலிழந்த நபர் தடுப்பூசி பெற்ற பின் எழுந்து நடந்த அதிசயம்

0
260

ஜார்கண்ட் மாநிலத்தில் உடல் செயலிழந்த நிலையில் நான்கைந்து ஆண்டுகளாக இருந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட பின் குணமடைந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ சல்காதி கிராமத்தை சேர்ந்தவர் துலார் சந்த் முண்டா. இவர் ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக கைகால்கள் செயல் இழந்து, பேச்சும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இவர் ஜனவரி 4 ம் தேதி கோவக்சின் தடுப்பூசி செலுத்திகொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளே எழுந்து நடக்க துவங்கி உள்ளார். இவரால் பேசவும் முடிகிறது. இந்த மருத்துவ அதிசயத்தை பற்றி அவர் கூறுகையில் “இந்த மருந்தை எடுத்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி” என்று கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here