கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0
748

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்தும், அதனை அகற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை திரிசூலத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமித்தவர்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. கோயில் நிலத்தை கவனிக்க வேண்டியவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். கடமை செய்வதற்கு தான் சம்பளம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் அமர அல்ல. செயல்படாத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here