கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞர் மீட்பு

0
193

கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த பாபு என்ற இளைஞரை ராணுவம் பத்திரமாக மீட்டது.
பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். வனத்துரையினாராலும் மீட்க முடியாத காரணத்தால் இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.
முதற்கட்டமாக மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள் அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் உணவு, தண்ணீர் வழங்கினர். அவரை கீழே கொண்டும் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். 43 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாபுவை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர் வெற்றி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here