யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் வோட்டு ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
உ.பி.யின் சஹாரன்பூரில் தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர், முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார். “ஆனால் நமது முஸ்லிம் சகோதரிகள் மோடியைப் புகழ்வதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
Home Breaking News முஸ்லீம் பெண்களின் உரிமைகளுக்கு புதிது புதிதாக இடையூறுகள்: எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு