ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த பிரச்சினை தேசிய அளவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடகா உயர்நீதிமன்றம் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நான்கு நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று பள்ளி திறக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது.