முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் பாஜக:உபி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் பேச்சு

0
208

”முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்ததன்வாயிலாக, உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் குடும்பங்கள் பிரியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “முஸ்லிம் பெண்கள் பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டு வெறும் கையுடன்கணவர் வீட்டுக்கு வந்தால், உடனடியாக முத்தலாக் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இந்த நடைமுறை முஸ்லிம் பெண்களின் வாழ்வை மட்டுமின்றி அவர்களது பெற்றோர் வாழ்வையும் வலி மிகுந்ததாக மாற்றியது”.இப்போது அந்த சட்டத்தினைகொண்டு வந்ததன் மூலம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here