கூவம் ஆற்றில் தினமும் கலக்கும் 3.6 கோடி லிட்டர் சாக்கடை நீர்: அதிகாரிகள் மெத்தனம்

0
620

ஆவடியில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி வெளியேறும் 3.6 கோடி லிட்டர் தண்ணீர் கருமை நிறத்தில் கூவம் ஆற்றில் கலப்பதால், மேலும் மாசடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி எல்லை வரை கூவம் ஆறு தெளிந்த நீராக வருகிறது. ஆவடி மாநகராட்சியை கடந்து செல்லும் போது, சாக்கடை போல கருமை நிறமாக மாறி மாசடைந்து, சென்னை மாநகருக்குள் செல்கிறது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால், கூவம் ஆறு மேலும் மாசடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here