சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

0
538

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இதற்காக மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here