‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாலமாக திகழ்கிறார்’ என புகழ்ந்துள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ‘கார்ட்டூன்’ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மோடி தன் இரு கைகளையும் நீட்டியவாறு ஒரு பாலமாக நிற்பது போன்ற ‘கார்ட்டூன்’ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அதில் சீனா பாக். உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் உதவி கேட்டு கூக்குரலிடுவது போலவும் அதன் தலைவர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.