சங்க காரியத்தை 1 லட்சம் இடங்களுக்கு விரிவுபடுத்துவது இலக்கு – சுனில் அம்பேகர்  அகில பாரத ஊடக துறை பொறுப்பாளர் ஆர்.எஸ்.எஸ்

0
606
      குஜராத்தில் நாளை தொடங்க உள்ள ஆர்.எஸ்.எஸ் ன் அகில பாரத பிரதிநிதி சபா சந்திப்பு பற்றிய ஊடக சந்திப்பில் ஸ்ரீ சுனில் ஜி கூறியது:
சங்கத்தின் நூற்றாண்டு இன்னும் 2 வருடங்களே உள்ள நிலையில் சங்கவேலை மேலும் நாடு முழுவதும் எல்லா நகரங்கள் கிராமங்கள் குக்கிராமத்தில் செல்ல 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட சங்க ஸ்வயம் சேவகர்கள் முழு நேரபணியில் ஈடுபட உள்ளனர். ஆசாதியின் அம்ருத் மஹோத்சவின் போது வெவ்வேறு மாநிலங்களில் செய்யப்பட்ட திட்டமிடலும் இந்த பைட்டகில் விவாதிக்கப்படும். சில சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது, எனவே இதுபோன்ற தகவல்களை சமூகத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கிராமப்புற அளவில் ஸ்வரோஜ்கர் (சுய தொழில்) மூலம் மக்ககிளிடத்தில் ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) உருவாக்க சங்கத்தால் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சம்ரஸ்தா (சமூக இணைவு), பரியாவரன் (சுற்றுச்சூழல்) மற்றும் பரிவார் பிரபோதன் போன்ற பிரிவுகளின் மூலம் சமூகத்தில் உள்ள பல அமைப்புகளுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயங்கள் இந்த பைட்டக்கில் விவாதிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here