கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே, நாம் எல்லோரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும்.
இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 65 ஆண்டுகள் தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலம் தான். அரசுகளுக்கு 5 ஆண்டுகள் தான் அதிகாரம் உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள். அதுதான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறது. அதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது.
அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்னைகள், சமூக பதற்றங்கள் இருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை. 18 மொழி செப்புடையாள் என பாரதியின் பாடலை போல ஒரே சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
100-வது சுதந்திர தினத்தில் உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறி இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.