காரைக்குடியில் 84 வது கம்பன் விழா நடந்தது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் வரவேற்றார். கம்பன் அடிப்பொடி விருதை சொ.சொ.மீ. சுந்தரத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை வழங்கினார். பா.ஜ., முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கி. வரதராஜன் எழுதிய ‘கம்பனின் பரதன் கண்டவன் வரதன்’ எனும் நுாலை மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் வெளியிட முதல்பிரதியை வே.மாணிக்கவேலு பெற்றுக் கொண்டார். கோவிலுார் ஆதினம் ஞானதேசிக சுவாமிகள் உலகக் கம்பர் கோட்டத்திற்கு ஆசி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கம்பன் விழா நடத்தப்பட வேண்டும். தமிழ் கவிஞர்கள் குறித்து இன்றைய தலைமுறை அறியும் படியான ஒரு முன்னெடுப்பை தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சியினர், அரசாங்கத்தில் உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் தமிழ் போற்றப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஆராய்ந்து அத்தனை மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். உலக அளவில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்க புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும். புதுச்சேரியில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது, என்றார்.